Thursday, April 19, 2012

சூரியனின் மேற்பரப்பில் பாரிய விரிசல்கள் இடம்பெற்றுள்ளன - நாஸா

சூரியனின் மேற்பரப்பின் கிழக்கு பகுதியில், பாரிய விரிசல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்காவின் நாஸா விண்வெளி மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இந்த வெடிப்புக்களும் விரிசல்களும் கடந்த திங்களன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நாஸா, சூரியனில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக நாஸாவினால் அனுப்பப்பட்டுள்ள எஸ்.டி.ஓ விண்வெளி ஓடம் மூலமே இவை அவதானிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அத்துடன், இவ்வாறு சூரியனின் மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள வெடிப்பு மற்றும் விரிசலினால் பூமிக்கு எதுவித பாதிப்பும் இல்லையெனவும் நாஸா விண்வெளி மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment