தங்க ஆபரண உற்பத்தியாளர்களின் ஆற்றல்களை மேம்படுத்த விசேட திட்டம் - ஆபரண அதிகார சபை.
சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தங்காபரண உற்பத்தியாளர்களின் ஆற்றல்களை மேம்படுத்தும் வேலைத் திட்டமென்றை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய மாணிக்ககல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக, தங்க ஆபரண தயாரிப்பின்போது பயன்படுத்தப்படுகின்ற நவீன உபகரணங்களை, தங்க ஆபரண சங்கத்திற்கு வழங்க தேசிய மாணிக்ககல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபை தீர்மானித்துள்ளது.
உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் நிலவுகின்ற போட்டித்தன்மைக்கும் விலைகளுக்கும் மத்தியில் தங்க ஆபரணங்களை தயாரிப்பதற்கு இந்த உபகரணங்களை பயன்படுத்த முடியுமென, அதிகார சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அத்துடன் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தங்க ஆபரண தயாரிப்பாளர்களின் உற்பத்தி பொருட்களை உலக வர்த்தக கட்டிடத்தொகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நவீன காட்சிக் கூடத்தில் விற்பனை செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும், திட்டமிடப் பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment