கனடாவில் இயங்கும் புலிகளின் ஊதுகுழலான பொய்பரப்பு பத்திரிகையில் கூலிக்கு தொழில்புரியும் கமலவாசன் என்பவரது வாகனம் தீக்கிரையாகியுள்ளது. இது கனடிய காப்புறுதி நிறுவனம் ஒன்றை ஏமாற்றி பணம் பறிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விடயம் என முதற்கட்ட விசாரணைகளின்போது புலனாகியுள்ளதாக தெரியவருகின்றது.
நிலமை இவ்வாறு இருக்கும்போது புலிவால் ஊடகங்கள் சம்பவத்திற்கும் இலங்கைப் புலனாய்வுத்துறைக்கும் தொடர்பு உண்டெனவும் செய்தி வெளியிட்டதுடன் விசாரணையின்போதும் இலங்கைப் புலனாய்வாளர்களாலேயே தனது கார் தீ வைக்கப்பட்டதாக கமலநேசன் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தேசத்தில் வசூலிப்பு மந்தமடைந்துள்ள நிலையில் பணம் சம்பாதிப்பதற்காக இவர்கள் மேற்கொள்ளும் இந்நடவடிக்கைகள் புலிகள் தொடர்ச்சியாக இவ்வாறான திட்டமிட்ட போலிக்குற்றச்சாட்டுக்களையே சுமத்தி வந்துள்ளனர் என்பதை கனடியப்பொலிஸாருக்கு மேலும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment