முஸ்லிம் - சிங்கள உறவு மிகச் சிறந்த நிலையில் உள்ளது - ஜனாதிபதி
இலங்கை முஸ்லிம்களுக்கும், சிங்கள வர்களுக்கும் இடையிலான உறவு, அன்று முதல் இன்று வரை, சிறப்பாக காணப்பட்டதாகவும், அவ்வுறவு தற்போதைய அரசாங்கத்தினால், மேலும் உறுதிப்படுத்த ப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலை திறந்து வைத்து உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
பள்ளிவாசல்களை திறந்து வைக்கும் சம்பிரதாய, சமய வழிபாடுகளுக்கு மத்தியில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதனை திறந்து வைத்தார்.
அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் அல்லாத அரச தலைவர் ஒருவர் பள்ளிவாசலொன்றை திறந்த சந்தர்ப்பம் இது எனவும் இலங்கை முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலான உறவு, அன்று முதல் இன்று வரை, சிறப்பாக காணப்பட்டதாகவும் அவ்வுறவு தற்போதைய அரசாங்கத்தினால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வைபவத்தில் கலந்து கொண்ட அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி கருத்து தெரிவிக்கையில், ஐக்கிய இலங்கையில் வாழும் அனைத்தின மக்களும் சமாதானமாக வாழும் சந்தர்ப்பத்தில் எந்தவொரு சக்திக்கும், அதனை சீர்குலைக்க இடமளிக்க முடியாதென தெரிவித்தார்.
அமைச்சர்களான சி.பி. ரட்னாயக, நவீன் திசாநாயக்க, முன்னாள் பிரதியமைச்சர் வீ. புத்திரசிகாமணி உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment