Sunday, April 8, 2012

மூத்த மகனுக்கு நடந்த கதி இளைய மகனுக்கும் நடக்கக் கூடாது - திருமதி குணரட்ணம் (காணொளி இணைப்பு)

தனது மூத்த மகனுக்கு நடந்த கதி இளைய மகனான பிரேம்குமார் குணரட்னத்துக்கும் நடந்துவிடக்கூடாது என்று அவரது தயார் திருமதி ஆர் .வி. குணரட்ணம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். மூத்த மகன் ரஞ்சிதம் குணரட்னம் கடந்த 1989ஆம் ஆண்டு எவருக்கம் தெரியாமல் கடத்தப்பட்டார். இதுவரைக்கும் அவரைப் பற்றிய தகவல்கள் தெரியவில்லை. அவரைப்போல பிரேம்குமாருக்கும் நடக்கக்கூடாது என்று அவரின் தாயார் திருமதி குணரட்னம் உருக்கமாகத் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பிரேம்குமார் குணரட்னத்தின் சகோதரி நிரஞ்சனி குணரட்னமும் கருத்து தெரிவித்தார்.

ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்த சென்றவரும் முற்போக்கு சோசலிசக் கட்சியின் தலைவருமான குமார மாத்தையா என அழைக்கப்படும் பிரேம்குமார் குணரட்னம் மற்றும் ஜே.வி.பி. மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியுமான திமுது ஆட்டிகல ஆகியோர் கடந்த 6 ஆம் திகதி காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com