Friday, April 13, 2012

தொழில் பெற்று தருவதாக்குறி பணத்தை மோசடி செய்த நபர் கைது

ஜேமனியில் வேலைவாய்ப்பினை பெற்றுத் தருவதாக கூறி 20 பேரிடம் பெருந்தொகையான பணத்தைப் பெற்ற ஒருவரை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜேர்மன் பிரஜை என தம்மை அடையாளப்படுத்தி கொண்டு சிலாபம், யாழ்ப்பாணம், கொழும்பு,அவிசாவலை மற்றும் முந்தல் ஆகிய பிரதேங்களை சேர்ந்த 20 பேரிடம் தலா ஒரு லட்சம் ரூபா வீதம் பணம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து, 10 ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட கடவுச் சீட்டுக்கள், போலியான விமான சீட்டுக்கள் மற்றும் வாகனம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபர் தமது ஏமாற்று நடவடிக்கைகளை கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் இருந்தே மேற்கொண்டு வந்தமை, ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளதாகவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment