Thursday, April 26, 2012

புலிகள் விட்டுச் சென்றவை கொண்டு சென்றது மேலும் இரு பலகர்களின் உயிரை.

கிளிநொச்சி பளைப்பகுதியிலேயே மேற்படி சோகம் நிகழ்ந்துள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த அப்பகுதியில் புலிகள் பல்வேறு வடிவங்களில் வெளிபொருட்களையும் வெடிகுண்டுகளையும் விதைத்து வைத்திருந்தது யாவரும் அறிந்த விடயம். அவ்வாறு புலிகளால் விட்டுச்செல்லப்பட்டிருந்த பார்வைக்கும் அளவிலும் சிறியதான வெடிபொருள் ஒன்று முறையே 4, 2 வயது பச்சிளம் பாலகர்களின் உயிரைக்குடித்துள்ளது.

தமிழ்மாறன், தனோஜன் எனப்படுகின்ற இருசகோதரர்கள் தமது காணியினுள் கிடந்த மேற்படி அநாமதேய பொருளை எடுத்து பொல்லால் அடித்தும்: கத்தியினால் வெட்டியும் விளையாடியபோது நேற்று பிற்பகல் இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இது சகோதரர்களும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.

புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் வெடிபொருட்களின் அபாயம் இருக்கின்றது எனக்கூறி அரசாங்கும் மீள்குடியேற்றுவதை தாமதமாக்கியபோது : மக்கள் முட்கம்பி வேலிகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள் என ஓலம் எழுப்பப்பட்டதன் பிரதிபலனே இவ்வாறான அனர்த்தங்களுக்கு காரணம். குறிப்பிட்ட பிரதேசங்கள் நன்கு பரிசோதிக்கப்பட்டு மீள்குடியேற்றப்பட்டிருப்பின் இவ்வாறான அழிவுகளை தவிர்த்திருக்க முடியும்.

மேற்படி சமப்பவம் தொடர்பாக இராணுவப் பேச்சாளரிடம் கேட்ப்பட்டபோது மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் சிறுவர்கள் இனந்தெரியாத பொருட்களை கையாள்வது குறித்து பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.

என்ன வகையான வெடிபொருள் வெடித்துள்ளது என்பது தொடர்பில் இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதுபோன்ற வெடிபொருட்கள் குறித்து அந்தப் பிரதேசங்களில் மக்களை தெளிவூட்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், கவனக்குறைவு காரணமாகவே இத்தகைய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.

மக்கள் மீள்குடியேற்றப்படும் போது நிலக்கண்ணி வெடிகள் தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதேனும் கண்ணுக்குப் புலப்படுமாயின் அதுகுறித்து அருகிலுள்ள பாதுகாப்புப் பிரிவினருக்கு உடன் அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment