குணரத்தினத்தை கடத்தியதாக பிரச்சாரம் செய்து அதனை மனித உரிமை மீறலாக காட்ட முயற்சி.
கண்கள் கட்டப்பட்டிருந்தபோது, இருவர் இறங்கிச் செல்வதை திமுது எவ்வாறு பார்த்தார்? - மேர்வின்
கடத்தல் தொடர்பில் பிரச்சாரம் செய்து அதனை மனித உரிமை மீறலாக வெளிக்காட்ட முயற்சித்த முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரத்தினத்துக்கு அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்கியதை ஒர் சர்வதேச சூழ்ச்சித் திட்டமாகவே கருத வேண்டுமென மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேர்வின் கருத்து தெரிவிக்கையில், நாட்டை பாதுகாக்கும் ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், மற்றும் இராணுவத்தினருக்கு அபகீர்த்தி உண்டாக்கும் நோக்கில் இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகிறது என்றும், இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்து வெட்கம் கெட்ட செயல்களில் ஈடுபட, குமார் குணரத்தினத்துக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தடன திமுது ஆட்டிகலவின் கண்கள் கட்டப்பட்டு வேனில் அழைத்துச் சென்றதாக கூறும் போது, இருவர் இறங்கிச் செல்வதை திமுது ஆட்டிகல எவ்வாறு பார்த்தார் என்று கேள்வியெழுப்பிப்பிய மேர்வின், குமார் குணரத்தினமும் திமுது ஆட்டிகலவும் மிகச் சிறந்த முறையில் இந்த நாடகத்தில் நடித்துள்ளனர் என்றும், அந்த சம்பவமானது பிரபல சிங்கள இலக்கிய நாவல்களில் ஒன்றான 'கொளு ஹதவத' வை நினைவுபடுத்துகிறது' எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment