Tuesday, April 17, 2012

சீதுவை தடுகம் ஓயவில் தோணி கவிழ்ந்ததில் மரணமான இருவரது நல்லடக்கம் நாளை

சீதுவை தண்டுகம் ஓயாவில் நேற்று மாலை தோணி கவிழ்ந்ததில் பேர் மரணமான இரு இளைஞர்களினதும் சடலங்கள் பிரேத பரசோதனை செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்டைக்கப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு களப்புப் பகுதிக்கு அண்மித்தாக உள்ள கடோலான தாவரங்களையும் காட்சிகளையும் பார்வையிடுவதற்காக சென்ற போதே இவர்கள் இருவரும் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளனர்.

அவர்களது சடலங்கள் சுழியோடிகள் மூலமாக நேற்று மாலை மீட்கப்பட்டன.

பள்ளியவத்த, அக்கரகம,கொடகமுவ பிரதேசத்தை சேர்ந்த ரொசேன் சர்வந்த(28 வயது), ஜா-எல,கனுவன பிரதேசத்தை சேர்ந்த மலிந்த விக்ரம சுரேந்ர (24 வயது) ஆகியோரே இச்சம்பவத்தில் மரணமானவர்களாவர். சம்பவத்தில் மரணமானவர்களின் பிரேதங்கள் இறுதி அஞ்சலிக்காக அவர்களுடைய வைக்கப்பட்டுள்ளது.

இருவரதும் நல்லடக்கம் நாளை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com