இலஞ்சம் பெற்ற பொலிஸார் மூவர் கைது
பாராளுமன்ற திடலுக்கருகில் கார் ஒன்று க்குள் இருந்த தம்பதியினரிடமிருந்து, பலவந்தமாக 20ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்ட மூன்று பொலிஸ் கான்ஸ்ரபில்கள் மிரிஹாண விசேட பொலிஸ் விசாரணைக் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, மேற்கொள்ளுப்பட்ட விசாரணைகளின்போது சந்தேகநபர்களான மூன்று பொலிஸ் கான்ஸ்ரபில்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், கைது செய்யப்பட்டவர்களில் மிரிஹாணா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரண்டு கான்ஸ்ரபில்களும், ஹோமாகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு கான்ஸ்ரபிலும் அடங்குகின்றார் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment