Monday, April 23, 2012

பிறேமதாஸவுடன் கைகோர்த்து நின்று மகாண சபை நிர்வாகத்தை முடக்கியவர் கருணாநிதியே!

வரதராஜப் பெருமாளின் ஒலிப்பதிவு உள்ளே..

இலங்கையில் தனித்தமிழ் ஈழம் அமைப்பதற்காக சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கான அழுத்தங்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கை மீது மேற்கொள்ள வேண்டுமென அண்டைய நாடான இந்தியாவின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அண்மையில் தெரிவித்திருந்தமையும் அதற்கு பதிலளித்த இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பயங்கரவாதத்திற்கு இலங்கையில் ஒரு போதும் இடமில்லை எனவும் கருணாநிதிக்கு தேவையானால் தமிழ் ஈழத்தை தமிழகத்தில் உருவாக்கிக் கொள்ளலாம் எனவும் மிகவும் தெளிவாக தெரிவித்திருந்தமையும் யாவரும் அறிந்த விடயங்கள்.

இந்தியாவிலே செல்லாக்காசாகி ஒரே இரவில் தூக்கியெறியப்பட்டு முழுக்குடும்பமும் ஊழல் மோசடியில் சிக்கித்தவிக்கும் கருணாநிதியின் கடந்த காலத்தை சற்றுப்புரட்டிப்பார்க்கவேண்டிய தேவை இங்கு ஏற்படுகின்றது. அந்தவகையில் இலங்கையில் இணைந்த வடகிழக்கின் முதலாவது முதலாவதும் , இறுதியுமான முதலமைச்சாரகவிருந்த திரு. வரதாராஜப்பெருமாள் அவர்கள் இலங்கைநெற் இற்கு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் வழங்கியிருந்த மிக நீண்ட செவ்வியொன்றின் ஒரு பகுதியை இங்கு கொண்டுவருகின்றோம். குறிப்பிட்ட செவ்வியில் முன்னாள் முதலமைச்சர் அவர்கள் இலங்கை போராட்ட வரலாற்றில் தான் சந்தித்த சுழிவுநெழிவுகள் ஏற்றத்தாள்வுகள் என பலவற்றையும் விரிவாக விளக்கியிருந்தார். துரதிஷ்டவரமாக குறிப்பிட்ட செவ்வியை முழுமையாக பிரசுரிக்க முடியாது போயிருந்தது.

ஆனால் தற்போது தமிழ் ஈழம் என முதலைக்கண்ணீர் வடிக்கும் கருணாநிதி இற்றைக்கு சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்னர் அன்றைய பாரத பிரதமர் ரஜீவ் காந்தி அவர்களின் பகிரத பிரயத்தனத்தில் உருவாக்கப்பட்ட அந்த மாகாண சபையை, ரஜீவ் காந்திக்கு பின்னர் வந்த பிபிசிங் உடனும் அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிறேமதாஸவுடனும் இணைந்து எவ்வாறு முடக்கினார் என்பதனை திரு வரதராஜப் பெருமாள் அவர்களின் சொந்தக்குரலில் இங்கு கேட்கலாம்.




கருணாநிதி தொடர்பாக சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் வரதராஜப் பெருமாள் அவர்கள் கூறியிருக்கும் இவ்விடயம் இந்திய அரசியல்வாதிகள் இலங்கையில் இனப்பிரச்சினையில் எவ்வாறு குளிர்காய்ந்தார்கள் என்பதற்கு சிறு உதாரணம் மாத்திரமே.

இலங்கையில் தனது ஆதிக்கத்தை அதிகரித்துக் கொள்வதற்காக இந்திய மத்திய அரசும், தமிழ் நாட்டிலுள்ள அப்பாவித் தமிழர்களின் வாக்குகளை சுரண்டுவதற்காக தமிழ் நாட்டு அரசியல்வாதிகளும் இலங்கையில் குருதி ஆறு ஓடுவதையே விரும்பினார்கள் என்றை உண்மையை எவரும் மறந்து விடமுடியாது.

கொடிபயங்கரவாத அமைப்பு ஒன்றின் தலைவராகவிருந்த பிரபாகரனுக்கு இருந்திராத தமிழீழ ஆசை கருணாநிதியின் நுனிநாக்கில் மாத்திரமே என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். இந்திய தலைவர்கள் தனித்தமிழீழம் பெற்றுத்தருகின்றோம் என தமிழ் இளைஞர்கள் இந்தியாவிற்கு அழைத்து இராணுவப் பயிற்சிகளையும் ஆயுதங்களையும் வழங்கி அவர்களுக்கு முதலாவதாக கடுந்தொனியில் விடுத்த கட்டளை நீங்கள் ஒருபோதும் தமிழீழம் கேட்கக்கூடாது அவ்வாறு அங்கு தமிழீழம் அமைந்து விட்டால் அது இந்தியாவின் இறைமைக்கு குந்தகமாக அமைந்து விடும் என்பதாகும். இதனை பின்னாட்களில் தமிழ் அமைப்புக்களின் தலைவர்கள் யாவருமே வெளிப்படையாக கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியாவின் இக்கபடநாடகப் பின்னணியை தெளிவாக அறிந்து வைத்திருந்தாலேயே பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்கள் கருணாநிதியின் கருத்துக்கு பதிலளிக்கையில் தமிழகத்திலேயே பெருமளவு தமிழர்கள் வாழ்கின்றனர். எனவே முடிந்தால் இந்தியாவில் தமிழ் ஈழக் கனவை நிறைவேற்றிக்காட்டுங்கள் என சாவால் விடுத்திருக்கின்றார் எனக்கொள்ளலாம்.

யாவருக்கும் நினைவிருக்கும் பிரபாகரன் தனது மாவீரர் தின உரை ஒன்றில் தமிழ் மக்கள் என்றுமே தமிழீழத்ததை விரும்பியவர்கள் அல்லர் எனவும் அவர்கள் நியாயமானதோர் அரசியல் தீர்வையே எதிர்பார்த்து நிற்கின்றனர் என்றார். அவ்வாறே அன்று இந்தியாவின் நச்சுக்கயிற்றை விழுங்கி தமிழீழம் எனக்கோஷமிட்ட எமது அரசியல்வாதிகள் எவரும் இப்போது இலங்கை பிளவுபடவேண்டும் என்ற கருத்துக்கு இடம்கொடுப்பதில்லை. அதற்கான காரணம் அவர்கள் அதன் ஜதார்த்தத்தை உணர்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில் புலம்பெயர் புலிவால்கள் கருணாநிதியின் குறிப்பிட்ட எவ்வித பெறுமதியுமில்லாத வார்த்தையை வைத்து தமிழ் மக்களை மீண்டும் குழப்ப முயல்கின்றனர். இவர்கள் முதலில் இந்தியா தமிழ் மக்களுக்கு செய்த துரோகங்களை எண்ணிப்பார்க்கவேண்டும்.

இந்தியா இறுதியுத்தத்தின்போது எவ்வாறு நடத்து கொண்டது. தமிழ் மக்களை இன்று எவ்வாறு நடாத்துகின்றது, இந்தியாவின் நிகழ்சி நிரலுக்கு இலங்கையிலிருந்துணைபோகும் நபர்கள் யார், அவர்கள் எதற்காக அதைச் செய்கின்றார்கள் என்ற விரிவான விடயங்கள் விலாவாரியாக ஆராயும்போது இந்தியாவின் பின்சென்றால் தமிழ் மக்கள் எவ்வாறான அபாயத்திற்கு முகம் கொடுக்கப்போகின்றார்கள் என்ற வினாவிற்கு விடை கிடைக்கும் .

No comments:

Post a Comment