வவுனியா செட்டிக்குளம் ஆனந்த குமார சுவாமி மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் நிவாரண கிராமங்களை அண்டிய பகுதிகளில் நேற்று மாலை வீசிய சூறாவளியினால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததுடன் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு உட்பட ஏனைய வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரித நிவாரணம் வழங்க இடர் முகாமைத்துவ மையம் விசேட நடவடிக்கை எடுத்துள்ளததுடன் பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.ச் சால்ஸ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment