பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் திறக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு துவங்கிவிட்டது. ஜனாதிபதி தேர்தலுக்கான 1-வது ரவுன்ட் தேர்தல் இன்று நடைபெறுகிறது. பிரான்ஸ் ஜனாதிபதி Nicolas Sarkozy மீண்டும் 5 ஆண்டுகளுக்கு நாட்டின் தலைவராக வர விரும்பும் தேர்தலில், அவருடன் சேர்த்து 10 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இவர்களில் இரு பிரதான வேட்பாளர்களான, Nicolas Sarkozy, மற்றும் Francois Hollande ஆகியோர் 2-வது ரவுன்ட் தேர்தலுக்கு செல்வார்கள். அந்த இறுதி ரவுன்ட் தேர்தல் மே 6-ம் தேதி நடைபெறும். அதில் ஜெயிப்பவரே அடுத்த ஜனாதிபதி.
தேர்தல் கருத்துக் கணிப்புகள், தற்போதைய ஜனாதிபதி சர்கோஸிக்கு சாதகமாக இல்லை. அவரது பொருளாதாரக் கொள்கைகள் மற்றும், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை அவருக்கு எதிராக உள்ளன.
அவருக்கு எதிராக போட்டியிடும் Francois Hollande, ‘உங்களில் ஒருவர்’ என்ற இமேஜை உடையவர். இவரது இரு வாக்குறுதிகள் மக்களிடையே பிரபல்யமாக உள்ளன.
முதலாவது, சர்கோஸி அரசின் ‘தேவையற்ற’ ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்துவது.
இரண்டாவது, சாமான்யர்களுக்கான வரிவிதிப்பை குறைத்து, அதியுச்ச பணக்காரர்களின் வரிவிதிப்பு வீதத்தை அதிகரிப்பது.
ஜனாதிபதி சர்கோஸியின் தேர்தல் பிரசாரம், “தற்போது உள்ள பொருளாதார தேக்க நிலை,
ஓட்டுச் சாவடியில் பூத் ஏஜென்டுகள். அருகே எங்காவது போலீஸ் நிற்கிறதா பாருங்கள்..
பிரான்ஸில் மட்டுமின்றி, ஐரோப்பா எங்கும் உள்ளது. மற்றைய ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார பிரச்னைகளில் மூழ்கி இருப்பதால், எம்மை மட்டும் குறை சொல்ல முடியாது” என்பதே.
பிரான்ஸின் வேலையில்லா திண்டாட்ட இன்டென்ஸ், கடந்த 10 வருட காலப் பகுதியில், தற்போதுதான் உச்சத்தில் உள்ளது. இது நிச்சயம் சர்கோஸிக்கு சாதகமானது அல்ல. இரு பிரதான வேட்பாளர்களும், பொருளாதார பிரச்னையையே தமது மெயின் பிரசாரமாக கொண்டுள்ளனர்.
இறுதியாக எடுக்கப்பட்ட தேர்தல் கருத்துக் கணிப்பு ஒன்று, “பிரெஞ்ச் வாக்காளர்களில் மூன்றில் ஒருவர் (33%) யாருக்கு ஓட்டளிப்பது என்பதை இன்னமும் முடிவு செய்யவில்லை” என்கிறது. இந்த பிரிவு வாக்காளர்கள்தான், யார் வெற்றி பெறுவது என்பதை தீர்மானிக்க போகிறார்கள்!
நன்றி விறுவிறுப்பு
No comments:
Post a Comment