இலங்கை இந்திய கடற்பரப்பில் மீனவர்கள் தாக்கப்படுவதான தொடர்சியான குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் இந்திய கடலோரக் காவல்படையினருக்கும் (Coast Guards), இலங்கை கடலோர காவல்படை யினருக்குமான விசேட பயிற்சிகள் இன்று மாலதீவு கடல் பகுதியில் ஆரம்பமாகி உள்ளன.
Dosti XI என சங்கேதப் பெயரிடப்பட்டுள்ள இந்த 5 நாள் கூட்டுப் பயிற்சி இன்று காலை ஆரம்பமாகியுள்ளதுடன் பயிற்சிகள் வெள்ளிக்கிழமை இரவுவரை தொடரும் என தெரியவருகிறது.
இந்திய – இலங்கை கடலோரக் காவல்படையினர் இந்த பயிற்சியின்போது தமக்கிடையே யுத்த விளையாட்டு' (war games) ஒன்றை நடத்தவுள்ளனர். இதனை கிட்டத்தட்ட பலப்பரீட்சை என்றே சொல்லலாம்.
இந்திய கடலோரக் காவல்படையின் 'ஐ.சி.ஜி.எஸ். சங்கல்ப்', 'ஐ.சி.ஜி.எஸ். சுபத்ரா' ஆகிய இரு கப்பல்களும், இலங்கை கடலோரக் காவல்படையின் 'எஸ்.எல்.என்.எஸ். சாகரா' கப்பலும், இந்த யுத்த விளையாட்டில் கலந்து கொள்கின்றன.
இந்தியக் கடற்படையானது இலங்கை கடலோரக் காவல்படையுடன் பலப்பரீட்சையில் ஈடுபடுவது இதுவே முதல்தடவை எனக் கூறப்படுகின்றது.
இந்தியக் கப்பல்களுடன் போர் விளையாட்டில் கலந்து கொள்ளும் இலங்கை கப்பல் எஸ்.எல்.என்.எஸ். சாகரா, OPV (Offshore Patrol Vessel) ரகத்தைச் சோந்தது. இந்திய – இலங்கை கடல் பகுதியில் யாராவது எல்லை தாண்டி வருகிறார்களா என்று ரோந்து சுற்றும் கப்பல் இதுதான்.
No comments:
Post a Comment