இராணுவ கொடி வெளியீடு
இராணுவ ஞாபகார்த்த மாதம் இன்று ஆரம்பமாவதையிட்டு வெளியிடப்பட்ட இராணுவ கொடி ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம் பெற்றது.
இந்த வைபவத்தில் முப்படைத் தளபதிகள்- மாகாண ஆளுநர்கள் -பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ- நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் கீதாஞ்சன குணவர்தன- பொலிஸ் மாஅதிபர்-பிரதேச செயலாளர்கள் மற்றும் படை வீரர்கள் சேவை அதிகார சபை உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த இராணுவ கொடி மூலம் திரட்டப்படும் நிதி இராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரது சமூக சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment