புத்தாண்டின் பின்னர் பால்மா மற்றும் பாண் விலை அதிகரிக்குமாம்
சிங்கள தமிழ் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் அடுத்த வாரத்தில் எரிவாயு விலை மற்றும் பால்மா உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி சமையல் எரிவாயு பல்மா,சீனி,மா, ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கும் எனவும், இதன் காரணமாக பாண் மற்றும் பேக்கரி தயாரிப்;பு பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது .
இந்த விலை அதிகரிப்பு புத்தாண்டின் முன்னர் அதிகரிக்க அரசாங்கத்திற்கு அவசியமாக இருந்ததாகவும் ,ஆயினும் பொது மக்களிற்கு அழுத்தங்களை ஏற்படுத்தாத வகையில் புத்தாண்டின் பின்னர் விலைகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் இறக்குமதி பொருட்களுக்கான வரிகளை அதிகரித்துள்ளமையும் விலை அதிகரிப்பிற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment