அவுஸ்திரேலிய பாராளுமன்ற சபாநாயகர் பீற்றர் ஸ்லிப்பர் பதவி விலகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு எதிராக பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டும் ஊழல் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப் பட்டுள்ள நிலையில், அவரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உணர்வுகளை தூண்டும் வகையில், சபாநாயகர் தமக்கு ஆபாச தொலைபேசி குறுந் தகவல்களை அனுப்பியுள்ளதாக, அவுஸ்திரேலிய சபாநாயகரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் முன்னாள் பாராளுமன்ற உத்தியோகத்தர் சபாநாயர் மீது குற்றஞ்சுமத்தியுள்ளதுடன், பொதுமக்களின் வரிச் சேவை நிதியை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக அவுஸ்திரேலிய சபாநாயகரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியுள்ள நிலையில், அவர் பதவி விலகியுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ள தமக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணையின் தீர்ப்பு கிடைக்கும் வரை ஸ்லிப்பர் சபாநாயகர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், தமக்கெதிரான அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் பாராளுமன்ற சபாநாயகர் பீற்றர் ஸ்லிப்பர் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment