கண்டி கட்டுக்கலை அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர் கோவிலின் பங்குனி உத்தர பஞ்சரத பவனி நேற்று நடைபெற்றது. இதனையிட்டு ஸ்ரீபஞ்சமுக விநாயகருக்கும், ஸ்ரீ சோமசுந்தரேஷ்வர பெருமானுக்கும், ஸ்ரீ மினாட்சி அம்பிகைக்கும் ஷசண்முகப் பெருமானுக்கும், அடோத்தர சதங்காபிஷேகமும், விசேட அங்கார பெருமானுக்கும் அஸ்டோத்திர சதங்காபிஷேகமும், விசேட அலங்கார தீபராதனைகளும் வேதபாராயணமும் நடைபெற்றது.
கோவிலின் நிர்வாக சபைத் தலைவர் ஜீ. கிருணனமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்திய மாகாண முதல் அமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் மத்திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர், கண்டி மாவட்ட சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் விசேடமாக பக்திப் பாடல் பாடுவதற்காக இந்தியாவின் பிரபல பாடகர் டி. எம். சௌந்தராஜனின் மகன் டி. எம். எஸ். செல்வக்குமார் வருகை தந்து பக்தி பஜனைப் பாடல் இசைத்தார். இந்தியாவின் பிலபலமான பிரதான குருக்கள் தலைமையில் சமய கிரிகைகள் நடைபெற்றன.
செய்தி-இக்பால் அலி
No comments:
Post a Comment