நீர்கொழும்பு கட்டுவ கனிஸ்ட வித்தியாலய அதிபரின் மோட்டார் சைக்கிள் அதிபரின் காரியாலயம் உடைக்கப்பட்டு திருடிச் செல்லப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது.
குறித்த பாடசாலை அதிபர் நேற்று பாடசாலை நேரத்தில் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாடசாலை முடிவடைந்தவுடன் அவரது மோட்டார் சைக்கிள் அதிபரின் காரியாலயத்தி;ல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை பாடசாலை திறக்கப்பட்ட போது காரியாலயம் உடைக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் திருடிச் செல்லப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
அதிபர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பிரதி அதிபர் இது தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.
No comments:
Post a Comment