Tuesday, April 10, 2012

சிரியாவின் சமாதான முயற்சி கேள்விக்குறியாகியுள்ளது - ஐக்கிய நாடுகள் சபை

சிரியா தொடர்பிலான மோதல்களை முடிவுறுத்தி சமானதான திட்டத்தை அமுல்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் சபைக்கு காலவசகாசம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் நேற்று அந்நாட்டில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற மோதல்களினால் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்த சமாதான திட்டத்திற்கு அமைவாக எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் சிரிய அரசாங்மும் கிளரச்சியாளரகளும் போர் நிறுத்த உடன்படிக்கை மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது எனினும் இது குறித்து இருதரப்பும் எவ்வித உடன்பாடுகளையும் எட்டவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சிரியா தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி கொபி அனானினால் முன்வைக்கப்பட்டுள்ள 6 யோசனைகள் கொண்ட திட்டத்தை அமுல்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு சிரிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்த போதிலும் இதுவரை முன்னேற்றங்கள் எதுவும் எட்டப்படவில்லையென ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் குற்றம் சாட்டியுள்ளதுடன். கடந்த சில தினங்களாக இடம்பெற்ற மோதல்களினால் நூற்றுக்கு அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com