பலஸ்தீன - இலங்கை நட்புறவை மேலும் வலுப்படுத்த இரு நாட்டு தலைவர்களும் இணக்கம்
பலஸ்தீன் ஜனாதிபதியும், இலங்கை ஜனாதிபதியும் இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கு இணக்கம் கண்டுள்ளனர். இரு நாட்டுத் தலைவர்களதும் தலைமையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற இருபக்க பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பலஸ்தீன உயர்மட்ட ராஜதந்திரக் குழு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று முன்தினம் கொழும்புக்கு வந்து சேர்ந்தது.
இக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அரச பிரதிநிதிகளுடன் நேற்று இருபக்க பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இதன் போதே மேற்படி இணக்கம் காணப்பட்டது.
0 comments :
Post a Comment