யாழ். மாவட்டம் முழுவதற்குமான 'லக்ஸபான' மின்சாரம் அடுத்த ஆண்டு இறுதியில் சுமார் 20 வருடங்களின் பின்னர் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி வரை வழங்கப்பட்டு வந்த 'லக்ஸபான' மின்சாரம் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் பளையையும் எட்டியிருந்தது. இன்னும் ஓரிரு தினங்களில் மாசார் பகுதிக்கும் தொடர்ந்து கொடிகாமம், கச்சாய், வரணி போன்ற பகுதிகளுக்கும் 'ஸக்ஸபான' மின்சாரம் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் துரித கதியில் வருகின்றன என்று யாழ். மாவட்ட மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர்
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் கிளிநொச்சி மாவட்டம் முழு வதற்கும் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் 'லக்ஸபான' மின்சாரம் வந்து விடும். தற்போது வவுனியாவில் இருந்து 33 ஆயிரம் வோல் டேஜில் மின்விநியோகம் வழங்கப்படுகிறது.
இதேவேளை குடாநாட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு 132 ஆயிரம் வோல்டேஜில் 'லக்ஸபான' மின்விநி யோகம் வழங்கப்படும். இதற்காக மின்தூண்கள் மீண்டும் நடப்படுவதோடு மின்கோபுரங்கள் கிளிநொச்சி காட்டுப் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்றன.
இந்த மின்சாரத்திட்டப் பணி களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஜப்பான் ஆகியன பெரும் தொகை நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment