Thursday, April 12, 2012

நிலநடுக்கத்தின் பின்னர் கரையைத் தாக்கிய இராட்சத அலைகள்! (வீடியோ)

நேற்று இந்தோனேஷியாவின் ஆச்சே பிராந்தியத்தின் தலைநகரான பண்டாஆச்சேவில் இருந்து 495 கிலோ மீட்டர் தொலைவில், கடலுக்குள் 33 கிலோ மீட்டரில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் நீக்கிக் கொள்ளப்பட்டது.

ஆயினும் நிலநடுக்கத்தின் பின்னர் இராட்சத அலைகள் கரையைத் தாக்கியுள்ளன.

நிலத்தட்டுக்கு மேலிருந்து கீழாக நிலநடுக்கம் ஏற்பட்டாலேயே பாரிய அலைகள் உருவாகும் எனவும், எனினும், நேற்றைய தினம் நிலநடுத்தட்டிற்கு சமாந்திரமாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் பாரிய அலைகள் உருவாகவில்லை எனவும் அமெரிக்க பூகோளவியல் ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

எனினும், நிலநடுக்கத்தினால் அலைகளின் வீரியம் அதிகரித்திருக்கும் என எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சுமத்ரா தீவுப் பகுதிகளில் இராட்சத அலைகள் கரையைத் தாக்கியுள்ளன.

No comments:

Post a Comment