யாழ்.மாதகல் கடலில் மூழ்கி முதியவர் ஒருவர் பரிதாப மரணம்.
யாழ்.மாதகல் பகுதியில் உள்ள கடற்கரைக்கு நண்பர்களுடன் நீராட சென்ற ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் சில்லாலை பண்டத்தரிப்பைச் சேர்ந்த இன்னாசிமுத்து இம்மனுவேல் (வயது 63) என்பவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை இளவாலைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment