Friday, April 6, 2012

சன் சீ கப்பலில் இலங்கையர்களை கடத்திய பிரதான சந்தேக நபர் பிரான்ஷில் கைது.

கனடாவுக்கு சன் சீ கப்பல் மூலம் ஏறத்தாள 500, இலங்கையர்களை கடத்திய பிரதான சந்தேக நபரை பிரான்ஷில் வைத்து நேற்று கைது செய்ததாக,பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த தயாகரன் மார்க்கண்டு என்ற சந்தேக நபரே இவ்வாறு பிரான்ஷில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய இரகசிய பொலிஸார், பிரான்ஸ் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அவர் பிரான்ஸில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அவரை கனடாவுக்கு கொண்டு வருவதற்கான சட்ட பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அவரை கனேடிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் பட்சத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்படுவதுடன், ஒரு மில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தயாகரன் மார்க்கண்டு ஏற்கனவே அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டவிரோதமான பொருட்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டு அபராதம் செலுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment