Tuesday, April 3, 2012

வடமாகாண ஆளுநரின் பங்களிப்பே பிரதேச சுகாதார முன்னேற்றத்திற்கு காரணம்-வன்னி வைத்தியர்கள்

வன்னி வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் அப்பிரதேசங்களின் சுகாதார சேவைகளின் முன்னேற்றம் தொடர்பாக வடமாகாண ஆளுநர் ஜி.எ.சந்திர சிறியைப் பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர். இன்று யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஆளுநரின் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே வடமாகாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், வைத்திய அத்தியட்சகர்கள், பொறுப்பு வைத்திய அதிகாரிகள், வடமாகாண ஆளுநரை பாராட்டி தமது நன்றியை தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இக்கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு சில முக்கிய தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவையின் தேவையின் பொருட்டு வைத்தியர்கள் இடமாற்றம் செய்யப்படுவதாயின் ஆளுநரின் ஆலோசனையைப் பெற்று நடைமுறைப்படுத்துவதுடன் இடமாற்றங்கள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் யாவும் அரச சுற்றறிக்கைகளின்படி பின்பற்றப்படவேண்டுமெனவும் தீவகப்பகுதி மற்றும் பின்தங்கிய பகுதிகளில் கடமையாற்றும் வைத்தியர்களுக்கு விசேட ஊதியம் வழங்கப் படவேண்டுமெனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முல்லைத்தீவு வைத்தியசாலை வைத்தியர்களின் விடுதிக்குரிய மின்கட்டணத்தை பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகம் செலுத்தவேண்டுமெனவும் தீவகப்பகுதியில் கடமையாற்ற முன்வரும் வைத்தியர்களுக்கு வீட்டு வசதி உட்பட விசேட சலுகைகள் வழங்கப்படவேண்டுமமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment