கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு அஷீஷ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்ட பொதியை அனுப்பிய சம்பவத்துடன் தொடர்படைய மற்றொரு வெளிநாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். பெங்கொக் செல்வதற்காக, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த போதே, இவர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள் அனுப்பிய சம்பவம் தொடர்பில், கடந்த வாரம் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் பிரிட்டிஷ் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இவருடன் வருகை தந்த மற்றொரு பிரிட்டிஷ் பிரஜை, நேற்றிரவு தாய் விமானத்தினூடாக, வெளிநாடு செல்வதற்கு, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த போது, கைது செய்யப்பட்டார்.
இவர் தொடர்பான விசாரணைகளை, போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மேறகொண்டுள்ளது. இலங்கையை சேர்ந்த பெண்ணொருவரின் பெயருக்கு இந்த போதைப்பொருள், இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டிருந்தது. குறித்த இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகளே, இந்த சம்பவத்துடன் நேரடி தொடர்புடையவர்கள் என, இனங்காணப்பட்டுள்ளது. பொலிஸ் போதைவஸ்து பிரிவினர், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
No comments:
Post a Comment