Tuesday, April 24, 2012

தமிழக அரசியல் வாதிகளுக்கு, தமிழீழம் என்பது பசிகொண்ட ஓநாய்களுக்கு பௌர்ணமி தின நிலா போன்றது.

இந்தியாவின் பிரபல நாளேடான த ஹிந்து பத்திரிகை பிரசசினையின் ஓர் அங்கம் என்ற ஆசிரியர் தலையங்கத்துடன் வெளியிட்டுள்ள கட்டுரையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென்பதில், இந்தியா உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கும் நிலையில், அதன் பின்னணி அர்த்தத்தையும், உணர்வையும் தமிழக அரசியல் கட்சிகள் நோக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளதுடன் தமிழக அரசியல் வாதிகள், ஊழையிடுவது ஈழக்கனவிற்கான அழுகையல்ல எனவும் அது தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியலின் அவசர தன்மையை புலப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழீழம் அமைப்பது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன், சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடாத்த வேண்டுமென, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராம்தாஸ், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த் போன்றோர் கருத்து தெரிவித்துள்ள நிலையிலேயே, த ஹிந்து இவ்வாறு இவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது.

நியாயமற்ற கோரிக்கைகளையும், பரிந்துரைகளையும் தமிழக அரசியல் வாதிகள் முன்வைப்பதால், சிறிய அளவு அணுகூலத்தை பெற்றுக்கொடுப்பதிலும் பார்க்க, நிலைமையை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச்செல்லும். உயர்ந்த நோக்கங்களுடன் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை காணும் திடமான நிலைப்பாட்டில் இந்தியா உள்ள நிலையில், அதன் பின்னணியில் உள்ள அர்த்தத்தை, தமிழக அரசியல் கட்சிகளும், அரசியல் வாதிகளும் அவதானிக்க வேண்டுமென, ஹிந்து பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment