தனது நாட்டில் அமெரிக்காவையும் தாக்கும் அளவுக்கு ஆயுதங்கள் உள்ளன என்று வடகொரியாவின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். துணை மார்ஷல் ரி யோங் ஹோ இன்று கூறுகையில் அமெரிக்கா, மற்றும் தென் கொரியாவிடமிருந்து வடகொரியாவைக் காப்பற்ற வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற "ஹவுஸ் ஆஃப் கல்ச்சர்' கூட்டத்தில் அவர் கூறியபோது ஒரே அடியில் அமெரிக்காவை வீழ்த்தும் அளவுக்கு அதி நவீன ஆயுதங்கள் உள்ளன என்று அவர் ராணுவ அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
அதேபோல் சில "சிறப்பு நடவடிக்கைகள்" தென் கொரியாவை சாம்பலாக்கிவிடும் என்றும் வட கொரியா தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment