அரச வைத்தியசாலைகளுக்கான மருந்து மற்றும் ஏனைய இரசாயண திரவியங்களை கொள்வனவு செய்யும் முறைமையில், மாற்றங்களை மேற்கொள்வதற்கு, திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் இப்புதிய திட்டம் தொடர்பாக ஆராய்வதற்காக,அமைச்சரவை உபகுழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளாதகவும்.இவ்வுப குழுவில் சிரேஷ்ட அமைச்சர்களான பேராசிரியர் திஸ்ஸ விதாரண, கலாநிதி சரத் அமுனுகம மற்றும் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக ஆகியோர்,இடம்பெற்றனர்.எனவும் இக்குழுவின் பரிந்துரைகள், அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறித்த பரிந்துரைகளை அமுல்ப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி அதிகாரிகளுக்கு, அண்மையில் ஆலோசனை வழங்கினார் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் சத்திரசிகிச்சை உபகரணங்கள் மற்றும் இரசாயண திரவியங்களை, உள்ளுர் உற்பத்தியாளர்களிடம் கொள்வனவு செய்வது தொடர்பாக, அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாகவும். இதற்கு திறைசேரியின் அனுமதியும், கிடைத்துள்ளது என தெரிவித்தார்.
அத்துடன் அரச வைத்தியசாலைகளுக்கு வருடாந்தம் 24 ஆயிரம் மருந்துகள், சத்திரசிகிச்சை உபகரணங்கள் மற்றும் இரசாயண உபகரணங்களை சுகாதார அமைச்சு கொள்வனவு செய்வதாகவும் இதற்காக, சுகாதார அமைச்சு வருடாந்தம் 2 ஆயிரம் கோடி ரூபாவை செலவிடுவதுடன் வருடாந்தம் 450 கேள்வி மனுக்கள் கோரப்படுகின்றது. இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை தவிர்ப்பதற்காக, மருந்து கொள்வனவு முறைமைகளில், மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு, சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment