கொழும்பில் வாகன விபத்துக்கள் மற்றும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்து வதற்காக, சிசிரிவி கமரா பொருத்தப்பட்ட நடமாடும் வாகன சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள தாகவும், இத்திட்டம் ஏனைய நகரங்களுக்கும் விஸ்தரிக்கப்பட வுள்ளதாகவும், பொலிஸ்மா அதிபர் என்.கே இலங்ககோன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பாதுகாப்பு செயலாளர் கேட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் கொழும்பு நகரெங்கும் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கமராக்களால் வாகன விபத்துக்கள் மட்டுமல்லாமல், குற்றச் செயல்களும் குறைவடைவதற்கு சிசிரிவி கமராக்களால் பெரும் பங்களிப்பை செய்துவருகின்றது.
அத்துடன், இத்திட்டத்தை மேலும் பரவலாக்கும் விதத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிசிரிவி கமரா பொருத்தப்பட்ட நடமாடும் வாகனங்கள் நேற்று முதல் நகரெங்கும் சேவையில் ஈடுபட்டுள்ளன. இவற்றின் மூலம் தவறு செய்யும் சாரதிகளை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், வாகனத்தில் சக்திவாய்ந்த கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், இவற்றால் பெறப்படும் தகவல்கள் நம்பகத்தன்மை வாய்ந்த வையாக இருக்கும் என பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment