கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் மிலிந்த மொரகொட தமது பதவியிலிருந்தும், நகர சபை உறுப்புரி மையில் இருந்தும் விலகத் தீர்மானித்து ள்ளதாக கொழும்பு மாநகரசபைத் தகவல்கள் தெரிவித்துள்ளதுடன், எதிர்வரும் 25 ம் திகதி கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியில் முக்கிய பதவியொன்றை பொறுப்பேற்பதற்காகவே மிலிந்த மொரகொட இவ்வாறு பதவி விலக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவ்வாறு மொரகொட தமது பதவியை ராஜினாமா செய்யும் சந்தர்ப்பத்தில் கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு உறுப்பினர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment