இணையத்தளத்தின் ஊடாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட எட்டுப் பேர் கைது.
சர்வதேச ரீதியில் உள்ள போதைப் பொருள் பாவனையாளர்கள் போதைப் பொருள்களை இலகுவாக கொள்வனவு செய்வதற்கு வசதியாக, இணையத் தளங்கள் மூலம் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட எட்டுப் பேரை அமெரிக்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
இரகசியமான முறையில் இந்த போதைப்பொருள் வர்த்தகம் நடத்தப்பட்டுவந்ததாக தெரிவித்த அமெரிக்க அதிகாரிகள், நெதர்லாந்து, அமெரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட நாடுகளில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment