யாழ்.அரியாலையில் திருடர்கள் பொது மக்களால் மடக்கி பிடிப்பு
அரியாலை கிழக்கில் சட்டவிரோதமான முறையில் மாடுகளை பிடித்து சென்ற ஒன்பது பேர் கொண்ட குழுவினரை பொது மக்கள் மடக்கி பிடித்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 7மணி யளவில்அரியாலை கிழக்கிற்கும் நெடுங்குளத்திற்கும் இடைப்பட்ட கடல்நீர் ஏரிப்குதியில் இடம்பெற்றுள்ளது.
அண்மைக்காலமாக அரியலைக்கிழக்கு பகுதியில் கட்டாக்காலியாக உள்ள ஆடு மாடுகளை இனம் தெரியாதவர்கள் இறைச்சிக்காக பிடித்து விற்பனை செய்து வரும் நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உழவு இயந்திரம் ஒன்றில் மாடுகளை ஏற்றிக்கொண்டு சென்ற சமயம் பொது மக்கள் இத்திருடர்களை மடக்கி பிடித்து யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment