Sunday, April 22, 2012

கொழும்பு - சிலாபம் வீதியில் விபத்தில் ஒருவர் மரணம்: கிரிக்கெட் வீரர் ஜெஹான் முபாரக் கைது

கொழும்பு-சிலாபம் வீதியில் மைக்குளம் பகுிதியில் இன்று இடம்பெற்ற விபத் தொன்றில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஜெஹான் முபாரக் கைது செய்யப் பட்டுள்ளார்.

டிபென்டர் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றுடன் ஒன்று மோதி இன்று பிற்பகல் 1மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்து மற்றுமொருவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தும்மலசூரிய - வத்துவத்த பகுதியைச் சேர்ந்த பிரதீப் குமார என்பவரே உயிரிழந்தவராவார். மாக்கஸ் உதயகுமார என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

டிபென்டர் வாகனத்தை இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெஹான் முபாரக் செலுத்தி வந்துள்ளதாகவும்,வெளிநாட்டவர்களுடன் வில்பத்து சரணாலயத்திற்குச் சென்று திரும்பிக் கொண்டிருக்கையில் இவ்விபத்து ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com