நாளை தொடர்பில் சிந்தித்து, ஒரு மின்குமிழையேனும் அணைப்போம் என்ற திட்டத்திற்கமைய, மாதத்தில், மின் பயன்பாட்டை 20 சதவீதத்தினால் குறைப்போருக்கு, ஒரு மாதத்திற்கு இலவசமாக மின் விநியோகத்தை வழங்க,மின்சார சபை தீர்மானித்துள்ளது.
மின்சக்தி, எரிசக்தி அமைச்சின் ஏற்பாட்டில், இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை தனியார் மின்சார சபை கூட்டாக இணைந்து, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோருக்கு, இவ்விசேட சலுகை வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
மார்ச் மாதத்திற்கிணைவாக, 20 சதவீதத்தினால் மின்சாரத்தை குறைக்கும் வாடிக்கையாளர், இதற்கு தகைமை பெறுவர். 10 சதவீதத்தினால் மின்சாரத்தை குறைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, மின் கட்டணத்திலிருந்து 50 சதவீதம் கழிவாக வழங்கப்படும்.
ஏப்ரல், மே அல்லது ஜூன் ஆகிய ஏதேனும் ஒரு மாதத்தில் மின்சாரத்தை குறைத்துக்கொள்வதன் மூலம், இலவசமாக ஒரு மாதத்திற்கான மின்சாரத்தினை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். இதற்காக வாடிக்கையாளர்கள் தற்போது பதிவு செய்து கொள்ளப்படுகின்றனர்.
இலங்கை மின்சார சபையின் வாடிக்கையாளர்கள் எல் வெற்றிடம் இலக்கம் 10 கொண்ட இலங்கை மின்சார சபை கட்டண கணக்கு இலக்கத்தை குறிப்பிட்டு, 011-4338338 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் அனுப்ப வேண்டும். லெகோ வாடிக்கையாளர்கள் ஈ.எஸ்.சி. வெற்றிடம் இலக்கம் 10 கொண்ட லெகோ இலக்கத்தை குறிப்பிட்டு 071-4643643 என்ற இலக்கத்திற்கு, குறுந்தகவல் அனுப்ப வேண்டும். நேற்று தொடக்கம் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்படுகின்றனர்.
மேலதிக தகவல்களுக்காக, 1901, 1987 அல்லது 1910 என்ற தொலைபேசி இலக்காங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு, மின்சார சபை மக்களை கேட்டுள்ளது.
No comments:
Post a Comment