இறைமையுள்ள எமது நாட்டில் தமிழீழக் கனவு ஒருபோதும் சாத்தியமாகாது என்றும், புலிகளின் தமிழீழக் கனவை தி.மு.க தலைவர் மு.கருணாநிதி முடிந்தால் இந்தியாவில் வைத்துக் கொள்ளட்டும், என பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புலிகளின் தமிழீழ கனவுக்காக ஐ.நாவின் கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தும் யோசனைக்கு தி.மு.க தலைவர் மு.கருணாநிதி ஆதரவு தெரிவித்துள்ளதையடுத்தே பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு, இங்கு இப்போது யத்தம் இல்லை. இவங்கையில் உள்ள சகல இன மக்களும் இன ஜக்கியத்துடன் வாழ்கின்றனர். எல்லோருடைய வாழ்வும் அமைதியாக உள்ளது. அத்துடன் எமது நாடு ஒரு சுதந்திரமான ஒரு நாடு என்பதை கருணாநிதி புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், கருணாநிதி தனது சுய அரசியல் இலாபத்துக்காக இவ்வாறு தரம் குறைந்த அரசியல் தந்திரோபாயத்தை கடைப்பிடிப்பது பரிதாபகரமானது என்றும், இன ஜக்கியத்துடன் வாழும் தமிழ் மக்களை கருணாநிதி தூண்டிவிடக் கூடாது எனவும், ஈழம் பற்றி யார் பேசுகிறார்களோ அவர்களை நாம் பயங்கரவாதிகளாகவே கருதுகிறோம் எனவும், பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஈழத்தை அமைக்கும் விருப்பம் கருணாநிதிக்கு இருந்தால் அதை இலங்கையில் வாழும் தமிழர்களை விட பெருமளவு தமிழர்கள் வசிக்கும் தமிழ்நாட்டில் உருவாக்கட்டும் என தெரிவித்ததுடன், சர்ச்சைக்குரிய அறிக்கைகளின் மூலம் எமது நாட்டை அழிக்க முயற்சிக்கும் அரசியல்வாதிகளில் கருணாநிதியும் ஒருவர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment