கடுவெல மறறும் கேகாலை ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை இடம்பெற்ற இரண்டு வாகன விபத்துகளில் ஐவர் உயிரிழந்தும் 8 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
கடுவெல கொத்தலாவல பகுதியில் மோட்டார் காரொன்று ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச்சென்ற பஸ் வண்டியொன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்தனர். விபத்தில், 8 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம், கேகாலை மொலகொட பகுதியில் வேன் ஒன்றும் பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு இருவர் உயிரிழந்ததாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment