வீதி விபத்துக்களை குறைக்க புதிய ஒழுங்கு விதிகள் - மோட்டார் போக்குவரத்து திணைக்களம்
வீதி விபத்துக்களை குறைப் பதற்கு புதிய ஒழுங்கு விதிகளை பொலிஸ் திணைக்களத்தின் பூரண ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்த உள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எஸ்.எச்.அரிஸ்சத்திர தெரிவித்துள்ளார்.
பாவணைக்கு பொறுத்தமற்ற வாகனங்களை அப்புறப்படுத்தல், விதிமுறைகளை மீறும் குற்றச் செயல்களுக்கு புள்ளிகள் வழங்குவதல், வகானங்களின் தரக்கட்டுப்பாட்டு பரீட்சைகளை மேம்படுத்தல், சாரதி பயிற்சி பாடசாலைகளின் பயிற்சிகளை மேம்படுத்தல், மற்றும் வாகன சாரதிகள் பாடசாலைகளுக்கு விதிமுறைச்சட்டங்களை வழங்குதல், போன்ற விதிமுறைகளை அமுல்படுத்த போவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
வீதி விபத்துக்கள் காரணமாக நாளொன்றுக்கு 6 பேர் உயிரிழக்கின்றனர். 80 வீத விபத்துக்கள் அலட்சியம் காரணமாக இடம்பெறுகின்றன. இவற்றில் 45 வீதமானவை மிக மோசமான விபத்துக்களாகும். கடந்த வருடம் 39 ஆயிரத்து 700 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்துக்களில் 2 ஆயிரத்து 721 பேர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்து 931 பேர் படுகாயமடைந்தனர். 18 ஆயிரத்து 916 பேர் சிறு காயங்களுக்குட்பட்டதாக போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
வீதி ஒழுங்கு விதி முறைகளை உரிய முறையில் கடைப்பிடிப்பதன் மூலம் இவ் விபத்துக்களை தவிர்க்கும் முடியுமென ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
0 comments :
Post a Comment