அமெரிக்க அதிபர் ஒபாமா, மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு வீட்டுக்கு செல்லலாம் என்று அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் மிட் ரோம்னி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் தற்போதைய அதிபர் பாரக் ஒபாமா ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுகி றார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் மிட் ரோம்னி போட்டியிடுகிறார்.
அதிபர் ஒபாமா குறித்து மிட் ரோம்னியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது: அதிபர் ஒபாமாவுக்கு ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் உங்கள் பொருட் களை பேக் பண்ண தொடங்கி விடுங்கள். நான்கு ஆண்டுகள் மீண்டும் பதவியில் இருக்க ஆசைப்படுகிறீர்கள். ஆனால் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. வேலை வாய்ப்பை பெருக்க வில்லை. மாறாக கோடிக்கணக்கில் கடன்தான் வைத்து இருக்கிறீர்கள். எனவே மக்களின் கவனத்தை திசை திருப்பாமல் மூட்டை முடிச்சுகளுடன் வீட்டுக்கு செல்லுங்கள். இவ்வாறு ரோம்னி கூறினார்.
No comments:
Post a Comment