களனி தொகுதிக்கான சிறிலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளராக அமைச்சர் மேர்வின் சில்வாவை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என களனி பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட அரசாங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள களனி பிரதேச சபைத் தலைவர் பிரசன்ன ரணவிரு, அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகயை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் களனியில் புதிய கட்சி காரியாலயத்தில் திறந்து வைத்து உரையாற்றிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் மேர்வின் சில்வாவை, கட்சி அமைப்பாளர் பதவியில் இருந்து விலக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே இருப்பதாகவும், களனியில் இடம்பெறுகின்ற அனைத்து கட்சி சம்பந்தமான நடவடிக்கைகளும், அவரது அனுமதியுடனே நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
ஆயினும், அமைச்சர் மேர்வின் சில்வாவை களனி தொகுதி அமைப்பாளராக ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், அவரை பதவி விலக்கி ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதேச சபைத் தலைவர் பிரசன்ன ரணவிரு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment