கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு, மக்கள் அவதானமாக இருக்கவும்
கடந்த ஒருவாரமாக பெய்துவரும் கடும் மழையினால் கொத்மலை நீர்த்தேக் கத்தின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ள தையடுத்து நீர்த்தேக்கத்தின் அவசர வான்கதவு திறந்துவிடப்பட்டுள்ளதாக தெரிவித்த நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் இதன்காரணமாக நீர்த்தேக்கத்தின் தாழ் பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
எவ்வாறாயினும் நுவரெலியாவிற்கு சுற்றுலா பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு இதனால் எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாதெனவும், குறித்த பகுதியிலுள்ள மக்களுக்கு இது புதிய விடயமென்பதால், அதிக அக்கறை செலுத்துமாறும் நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் காலநிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள தாழமுக்க நிலை, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment