இந்திய பாராளுமன்ற குழுவினர் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத் தினை மேற்கொண்டுள்ள இந்திய பாராளுமன்ற குழுவினர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை இன்று சந்தித்துக் கலந்து ரையாடினர்.
இந்த கலந்துரையாடலில் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், இலங்கையில் அகதிகள் பிரச்சினை 30 வருடகாலமாக இருந்துவருகின்றது எனினும் இடம்பெயர்ந்தோரில் 95 வீதமானோரை அனைத்து வசதிகளுடனும் அரசாங்கம் மீள்குடியமர்த்தியுள்ளதுடன், அவர்களுக்குத் தேவையான உட்கட்டுமான வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மிகக் குறுகிய காலத்தில் வழமையான நிலைக்குக் கொண்டுவந்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியமர்த்துவதிலும் உட்கட்டுமான வசதிகளை செய்துகொடுப்பதிலும் காட்டிய அக்கறை தொடர்பில் இந்திய சர்வகட்சி பாராளுமன்ற குழுவினர் திருப்தியடைந்ததாக அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment