இந்தியாவிலிருந்து தபால் மூலமாக இலங்கைக்கு ஹஸீல் போதைப்பொருள் அடங்கிய பொதி அனுப்பப்பட்ட பிரபல நடிகையான அஞசலா செனவிரத்ன காணாமல் போயுள்ளதாக லங்கா சி நிவ்ஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று முன்தினம் மாலையில் வெளிநாட்டர்கள் இருவர் தபால் மூலமாக அனுப்பப்பட்ட பொதியை பெற்றுக்கொள்வதற்காக வந்தபோது, அவர்களில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.
அதன் பின்னர் சுங்க அதிகாரிகள் நடிகையின் வீட்டிற்கு சென்றபோது, அந்த வீடு பூட்டப்பட்டிருந்ததுடன், நடிகையும் காணாமல் போயுள்ளார்.
சர்வதேச போதைப்பொருள் வியாபாரத்தில் இந்த நடிகை இலங்கையின் பிரதிநிதியாக செயற்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.
நடிகையும் மற்றைய வெளிநாட்டவரையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த இணையத்தள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment