இந்தியா தனது கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்கினி 5 எனும் ஏவுகணையை சோதனை செய்து அதில் வெற்றி கண்டிருக்கின்ற நிலையில் பாகிஸ்தான் அணு ஆயுத ஏவுகணை சோதனை நடத்தியிருக்கின்றது. இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை ஒரு டன் எடை கொண்ட அணு ஆயுதங்களை சுமந்து சென்று, 5,000 கி.மீ. தொலைவு உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டது. இதற்கு போட்டியாக பாகிஸ்தானும் 'ஹாட்ப்-4' என்ற ஏவுகணையை சோதனை செய்தது.
இந்த ஏவுகணை சுமார் 750 கி.மீ., தூரம் செல்லும் திறன் உடையது. இந்த ஏவுகணை அணுஆயுதங்களை தாக்கி செல்லும் வல்லமை கொண்டது என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இதன் வெற்றிக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் கிலானி விஞ்ஞானிகளுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment