Monday, April 2, 2012

அரச வைத்தியசாலை மருத்துப் பொருட்கள் யாழிலுள்ள தனியார் மருந்தகத்தில கண்டுபிடிப்பு

அரச வைத்திய சாலைகளுக்கு விநியோகிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள யாழ். ஆரியகுளம் பகுதியில் தனியார் மருந்தகமொன்றில் விற்பனைக்காக வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் திடீர் பரிசோதனைக் குழுவைச் சேர்ந்த குழுவினர் மேற்கொண்ட பரிசோதனையின் போது அரசாங்க இலச்சினை பொறிக்கப்பட்ட அரசாங்க வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் மருந்துகள் தனியார் மருந்தகத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தனியார் மருந்தக உரிமையாளருக்கெதிராக பொலிசாருடாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment