Monday, April 2, 2012

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு,மத்திய கிழக்கில் வேலை வாய்ப்பு

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு மத்திய கிழக்கில் வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுப்பதற்கான திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளதாக,புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சுடன் இணைந்து இந்த வேலைத்திடடம் முன்னெடுக்கப்படுவதாகவும் சமூகமயப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட காலப்பகுதியில் வழங்கப்பட்ட பயிற்சிகளின் அடிப்படையில் வேலைவாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படுவதுடன் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சமூகமயப்படுத்தப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள், இதுவரை பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment