விமான நிலையத்தில் பயணிகளின் உடலை ஸ்கேன் செய்து சோதனையிடுவதை எதிர்த்து அமெரிக்காவில் பயணி ஒருவர் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் நவின ஸ்கேன் கருவி மூலம் பயணிகள் சோதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், அமெரிக்காவின் போர்ட்லாண்ட் பன்னாட்டு விமான நிலையத்தில் ஜான் பிரனென் என்பவரை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், ஸ்கேன் மூலம் ஏன் சோதிக்கிறீர்கள், நானே எல்லாவற்ரையும் திறந்து காட்டுக்கிறேன் என்று கூறி, ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமானார்.
இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்தப்பக்கமாக சென்ற சிலர் திரும்பிக்கொண்டனர், சிலர் தங்கள் குழந்தைகளின் கண்களை மூடிக்கொண்டு சென்றனர்.
ஆனால், சிலர் அவரை படம் பிடித்துக்கொண்டனர்.
இதனையடுத்து, அந்த பயணி மீது பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துக்கொண்டதற்காக வழக்குப் பதிவு கைது செய்யப்பட்டார். பின்னர் விடுதலை ஆனார்.
இதுக்குறித்து, ஜான் பெரனான் கூறும்போது, நிர்வாணமானேனே தவிரநான் ஒன்றும், ஆபாசமாக செயல்படவில்லை என்றார்.
மேலும், போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகமானது பாதுகாப்பிற்கும், அந்தரங்கத்திற்கும் இடையே மூக்கை நுழைக்கிறது என்றார்.
No comments:
Post a Comment