அமைச்சர் விமல் வீரவங்சவும், அமைச்சர் பாட்லி சம்பிக்கவும் தன்னைப்பற்றி கூறியிருக்கும் கருத்துக்களை தான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக ஐ.தே.க. வின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச நாட்டை நேசிக்கும் வகையில் நடந்து கொள்பவர் என்று அண்மையில் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளதற்கு பதிலளிக்கும் வகையிலேயே, சஜித்பிரேமதாச இதனை தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவருடைய கருத்துக்கும் தான் பதில் அளிப்பதற்கு விருப்பம் கொள்வதில்லை எனவும், ஆயினும் தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நல்லது என்று குறிப்பிடும் போது அது தனக்கு மகிழ்ச்சியை தருவதாகவும் , அரசியல் வாழ்க்கையில் நல்லது கெட்டது என பல்வேறு விமர்சனங்கள் கூறப்பட்டாலும் அவற்றை விருப்பத்தோடு எதிர்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment