ஐக்கிய தேசிய கட்சியின் சகல ஆதரவாளர்களும் அக்கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைய வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியும் அதன் வாக்காளர்களையும் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்கு சஜித் பிரேமதாசவுடன் இணைந்து கொள்ள வேண்டும் எனவும், இல்லாவிடில் அக்கட்சி கடும் பிரச்சினையை எதிர் நோக்குவதை தவிர்க்க முடியாது எனவும் விமல் வீரவங்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் அதனை கேலி செய்யவும் , யுத்தத்தை நிறுத்துவதற்காக போராட்டத்தையுமே ஐ.தே.க. மேற்கொண்டது.
எமது நாடு எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளை மேலும் தூண்டிவிடும் சூழ்ச்சிகளையே ஐ.தே. க . தற்போது மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார் .
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற விவாதத்தின் போதே அமைச்சர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment